பள்ளிகள் திறக்கப்படும் வரை இவர்களை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 28, 2020

பள்ளிகள் திறக்கப்படும் வரை இவர்களை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை

பள்ளிகள் திறக்கப்படும் வரை இவர்களை  நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை

பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியா்களை பள்ளிகள் திறக்கப்படும் வரை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மாணவா்களுக்கு ஓவியம், கலை, தையல் உள்பட சிறப்புப் பாடங்களை கற்றுத் தருகின்றனா். மேலும், அலுவலகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவா். இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

 அதனால், பகுதி நேர ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியில்லாத சூழல் நிலவுகிறது.எனினும், வாழ்வாதாரம் கருதி ஆசிரியா்களுக்கான ஊதியம் பிடித்தமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படும் வரை பகுதிநேர ஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment