கொரோனாவை விரட்டும் கடலை மிட்டாய்!
கொரோனாவை விரட்டும் கடலை மிட்டாய்!
:நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால், எந்த நோயும் நம்மை நெருங்காது. உலகத்தையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா நோய் கூட, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.'
கொரோனாவை விரட்டும் கடலை மிட்டாய்!
:நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால், எந்த நோயும் நம்மை நெருங்காது. உலகத்தையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா நோய் கூட, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.'
'அப்படிப்பட்ட எதிர்ப்பு சக்தி, கடலை மிட்டாயில் இருக்கிறது,'' என்கிறார், சூலுார் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சம்ருதா.இது குறித்து அவர் கூறியதாவது:உலக சுகாதார நிறுவனம், 'மை பிளேட்' என்ற உணவு வழிமுறையை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, நாம் சாப்பிடும் உணவு தட்டில், 30 சதவீதம் தானியங்கள், 20 சதவீதம் பருப்பு, 50 சதவீதம் பழங்கள், காய்கறி நிச்சயம் இருக்க வேண்டும். இந்த முறையில் உணவு சாப்பிடுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.
இதற்கு பதிலாக, ஊட்டச்சத்துக்களை எளிமையான முறையில் பெறலாம். புரோட்டின் தேவைக்கு, அசைவ உணவுதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சைவத்திலும் நல்ல புரோட்டின் உள்ளது.
குறிப்பாக, கொரோனா நோய்க்கு எதிராக, போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி, நம்ம ஊர் கடலை மிட்டாயில் இருக்கிறது.குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியாக, எண்ணெய் பலகாரங்களை கொடுக்காமல், கடலை மிட்டாய், கடலை பர்பி, சாப்பிட சொல்லி பழக்கலாம்.
கேரட், வெள்ளரி போன்ற பச்சை காய்கறி சாலட் சாப்பிடுவது வாயிலாகவும் ஊட்டச்சத்தை பெறலாம். பழங்களில் சர்க்கரை சேர்க்காமல், ஜூஸ் ஆக்கி குடிக்கலாம். முளை கட்டிய பயறுகளுடன், எலுமிச்சை சாறு, மிளகு துாள் சேர்த்து சாப்பிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment