இந்த விவரங்களை உடனடியாக அனுப்புங்கள்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, June 28, 2020

இந்த விவரங்களை உடனடியாக அனுப்புங்கள்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு

இந்த விவரங்களை உடனடியாக அனுப்புங்கள்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள். சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். 

இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment