பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 27, 2020

பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி

பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.


ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து  முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா? அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment