தலைமை செயலகத்துக்கு விடுமுறை
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி களுக்காக 2-ம் சனிக்கிழமையான இன்று தலைமைச் செயலகத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுத்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு காரணமாக 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அரசு அலுவலர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகி றது.
இதற்கிடையே அலுவலகங் களில் வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி களை குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும்படி மத்திய சுகா தாரத் துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு மாதத்தின் 2-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், அந்த சனி, ஞாயிற்றுக்கிழமை களில் கரோனா தடுப்பு பணி கள் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமைச் செயலர் அறிவித்தார். அதன்படி நோய் தடுப்பு பணிகளுக் காக தலைமை செயலகத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment