தேர்வு ரத்து ஏன்? : அமைச்சர் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 9, 2020

தேர்வு ரத்து ஏன்? : அமைச்சர் விளக்கம்

தேர்வு ரத்து ஏன்? : அமைச்சர் விளக்கம்


மக்களுடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அரசு யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் பணியவில்லை,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை, மாதவரம் மண்டலத்தில், கொரோனா நோய் தடுப்பு பணிகளை, அமைச்சர் ஜெயகுமார், நேற்று ஆய்வு செய்தார்


.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டத்தை வைத்து மட்டும், மக்களை அச்சுறுத்த முடியாது. தொற்று ஏற்படாமல் இருக்க, மக்களிடம் மன மாற்றம் வர வேண்டும்.

கொரோனா, மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது. முக கவசம் அணிந்தால், சமூக இடைவெளி கடைப்பிடித்தால், கொரோனா வராது.இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருப்போர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், வெளியில் செல்லாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, நடவடிக்கை எடுக்க முடியும். மக்களை காப்பாற்ற, அரசு முயற்சித்து வருகிறது.எனவே, அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனாவால், 10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது

.யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் பணியவில்லை.அரசு மீது நியாயமான விமர்சனம் வைத்தால் ஏற்கலாம். உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தால், ஏற்க முடியாது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்

No comments:

Post a Comment