மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்த நடிகர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 13, 2020

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்த நடிகர்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்த நடிகர்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்த நடிகர்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளி்ல் உள்ள மாணவர்களுக்கு தேவையான கல்வி அறிவை வளர்க்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளும் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டுவருகிறது. 

அதன்படி மதுரை மாநகராட்சி நிர்வாகமானது மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஆன்லைன் மூலம் இணைத்து அவர்களுக்கு கலை, பேச்சாற்றல், ஓவியம், எதிர்கால திட்டமிடல், கதை அறிதல், கைவினை பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றை கற்றுதரும் வகையில் 

பல்வேறு அறிஞர்கள், கவிஞர்கள், உயர் அதிகாரிகள்  மற்றும் நடிகர்கள் மூலமாக பாடம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.

அப்போது தனது வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், விடாமுயற்சிகள் குறித்தும் நகைச்சுவையாக பேசி எடுத்துரைத்ததோடு வரலாற்றுகதைகளையும் , வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சிந்தனை கதையையும் நகைச்சுவையாக எடுத்துரைத்தார். 

மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர். ஆன்லைன் வகுப்புகளை மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். ஊரடங்கு

காலங்களில் மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உரிய கல்வியை சுவாரஸ்மாக வழங்கிவரும் மாநகராட்சியின் புதிய யுக்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது

No comments:

Post a Comment