வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 10, 2020

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் விவரம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் விவரம்


தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோா் எண்ணிக்கை 67.46 லட்சமாக உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட தகவல்:

 கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 46 ஆயிரத்து 903 ஆக உள்ளது. 

இதில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 14 லட்சத்து 31 ஆயிரத்து 165 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 26 ஆயிரத்து 865 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 22 ஆயிரத்து 821 பேரும் உள்ளனா்.


இதேபோன்று, 36 வயது முதல் 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 57 ஆயிரத்து 284 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 8 ஆயிரத்து 768 பேரும் உள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment