வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 2, 2020

வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்

வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்
வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர் காலம் இருக்கும் என்று ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி முகாமின் முதல் அமர்வில் கல்வியாளர்கள், நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் மாணவர் களுக்கு பயன்படும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆன் லைனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அந்த வகையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக, ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்ச்சியை தற்போது தொடங்கி உள்ளது.

இதன் முதல் அமர்வாக, ‘உயர் வுக்கு வேளாண் கல்வி’ என்ற நிகழ்ச்சி கடந்த 31-ம் தேதி (ஞாயிறு) மாலை நடந்தது. இதில் கல்வியா ளர்கள், நிபுணர்கள் பேசியதாவது:

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன்: படிக் காதவர்கள்தான் விவசாயம் செய் வார்கள் என்ற நிலை மாற வேண் டும். படித்தவர்களும் விவசாயம் செய்ய வேண்டும். வேளாண் மைக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும்.

சமீபகாலமாக, பலரும் குறிப் பாக மாணவிகள் வேளாண் படிப்பு களில் சேர ஆர்வம் காட்டுகின்ற னர். தோட்டக்கலை படிக்க விரும்பி னால், இளங்கலை வேளாண் படிப்பு படித்துவிட்டு முதுநிலையில் தோட்டக்கலையில் சேரலாம். வருங்காலத்தில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வேளாண்மை, தோட்டக் கலை படிப்புகளுக்கு நிச்சயம் அதிக வாய்ப்புகள் இருக்கும்.

தமிழக அரசின் முதன்மைச் செயலர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்: தமிழகத்தில் 14 அரசு விவ சாயக் கல்லூரிகள், 28 தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, நிகர்நிலை பல்கலைகளி லும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி விவ சாயப் படிப்பில் 3,788 இடங்கள், தோட்டக்கலை படிப்பில் 482 இடங் கள் உள்ளன. பி.டெக்.கில் வேளாண்மை பொறியியல், உணவு தொழில்நுட்பம், பிஎஸ்சி-யில் பட்டுப்புழு வளர்ப்பு, வன வியல் போன்றவற்றிலும் கணிச மான இடங்கள் உள்ளன.

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதி யியல், உயிரியல் அல்லது தாவர வியல் பாடங்கள் படித்தவர்கள் பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்டவற்றிலும், கணிதம், இயற்பியல், வேதியியல் படித்த வர்கள் பிடெக் வேளாண்மை பொறியியலிலும் சேரலாம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் 200 அல்லது 300 வேளாண் அலுவலர், தோட்டக் கலை அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விவசாயம், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், கூட்டு றவு வங்கிகள், நபார்டு வங்கி, ரிசர்வ் வங்கி, காப்பீடு நிறுவனங் களில் ஏராளமான பணி வாய்ப்பு கள் உள்ளன. உரம், பூச்சிக்கொல்லி தயாரிப்பு, விதை உற்பத்தி நிறு வனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரி கல்சுரல் சயின்ஸ் தலைமை ஆராய்ச்சியாளர், பேராசிரியர், முதுநிலை திட்டத் தலைவர் டாக்டர் சுதீஷ் மனலில்: அமிர்தாவில் பிஎஸ்சி விவசாயப் படிப்பில் 120 இடங்கள் உள்ளன. புகழ்பெற்ற கல்வியாளர்கள், நவீன தொழில்நுட்பம், சர்வதேச தரம், செயல்முறை கல்வி போன் றவை எங்கள் சிறப்பு அம்சங்கள். இங்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்)வரையறுத் துள்ள பாடத்திட்டத்தை சர்வதேச தரத்தில் பயிற்றுவிக்கிறோம்.

புத்தகம் சார்ந்த படிப்பாக அன்றி, முழுமையாக களப்பணியாகவே கற்றுத் தருகிறோம். இந்திய வேளாண் முறையோடு, சர்வதேச வேளாண் முறைகள், தொழில்நுட் பக் கருவிகளின் பயன்பாடுகளை யும் சொல்லித் தருகிறோம். ரோபோட்டிக் முறையில் விதை விதைப்பு, நவீன வேளாண் கருவி களைப் பயன்படுத்தி அறுவடை செய்வது போன்றவற்றை வயல் வெளிக்குச் சென்று மாணவர்கள் கற்கின்றனர். நீர்ப்பாசன முறைகள், மழைநீர் சேகரிப்பு முதலியவற்றை நேரில் தெரிந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அமர்வில், பிளஸ் 2 முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாண விகள், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில்களைப் பெற்றனர்.

No comments:

Post a Comment