தனி அறையில் தேர்வு எழுத அனுமதி:வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு
தேர்வு காலத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பாக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட அரசாணை:
தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை பரி சோதிக்க தொடுதல் இல்லாத தெர்மா மீட்டர் வழங்கவேண்டும்.
பரிசோதனையில் வெப்பநிலை உயர்ந்தோ, ஏதேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டாலோ அந்த மாணவர்களை தேர்வு எழுத அனு மதிக்காமல், வீட்டுக்கோ அல்லது மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கலாம். அந்த மாணவர் தேர்வு எழுத விரும்பினால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
அதேபோல் வெப்பநிலை உயர்ந்து, வேறு அறிகுறிகள் தென் படாத நிலையில், அந்த மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனு மதிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும். இது போன்ற மாணவர்களுக்கு தனி யான கழிப்பறை, கைகழுவும் வசதி செய்து தரப்படவேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் சுத்தமான முகக் கவசங்களை அணிந்து வரவேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment