கொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்? - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, June 28, 2020

கொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்?

கொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்?
தன்னார்வ பணிக்கு அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், கொரோனா கட்டாய தன்னார்வ பணிக்கு செல்ல, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றை ஒழிக்கவும், அதன் பரவலை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று பாதித்த குடும்பத்தினர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகப்பணி, தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி இல்லாத ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, கொரோனா தன்னார்வ பணி வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக, கொரோனா தன்னார்வ பணிக்கு ஆசிரியர்கள் தாமாகவே முன் வந்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்ட அதிகபட்ச பரவலால், பல ஆசிரியர்கள் இந்த பணியை கைவிட்டனர். ஆனால், சில வாரங்களாக ஆசிரியர்களை கட்டாயம் தன்னார்வ பணியில் ஈடுபட வேண்டுமென, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை, அடையாறு மண்டலத்தில், சி.எம்.எஸ்., திடீர் நகர் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், தன்னார்வ பணியில் ஈடுபட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால், கொரோனா தன்னார்வ பணியில் இருந்து, ஆசிரியர்கள் விலக துவங்கியுள்ளனர். மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டிய பணியில் உள்ள தங்களை, கட்டாய தன்னார்வ பணியில் இருந்து விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment