மாணவர் விடுதிக்கு I.S.O சான்றிதழ் பெற்ற முதல் மாநிலம்
பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்ற முதல் மாநிலமாக ஒடிசா ஆனது என மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்
பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்ற முதல் மாநிலமாக ஒடிசா ஆனது என மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்
.இது குறித்து அதிகாரி கூறியதாவது:
எஸ்.டி மற்றும் எஸ்.சி.,நலத்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மிஷன் சுவித்யா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ.எஸ்.ஓ., 9001-2015 தரச்சான்றிதழை பெறும் வகையில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்து வதற்கான நோக்கத்தோடு விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டது.
ஐ.எஸ்.ஓ., 9001-2015 தரச்சான்றிதழை பெறும் வகையில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்து வதற்கான நோக்கத்தோடு விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக கியோஞ்கர் மற்றும் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.கியோஞ்கர் மாவட்டத்தில் உள்ள 156 விடுதிகளில் 60 ம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள 90 விடுதிகளில் 13 விடுதிகளும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தரச்சான்றிதழ் வழங்கும் தணிக்கை குழுவினர் கியோஞ்கர் மாவட்டத்தில் 32 விடுதிகளையும், சம்பல்பூர் மாவட்டத்தில் 12 விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகளை பார்வையிட்டு சான்றிதழ் வழங்கி உள்ளன.
லாக்டவுண் முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்னர் மீதம் உள்ள விடுதிகள் மதிப்பீடுசெய்யப்படும் என அதிகாரி கூறினார்.

No comments:
Post a Comment