தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 115 பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 7, 2020

தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 115 பேர் விண்ணப்பம்

தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 115 பேர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஆண்டுக்கான விருது பெறுவதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. விருது பெற விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


இந்நிலையில், ஆன்லைன் தவிர செல்போன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இந்த விருதுக்கு வரும் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


 விருதுபெற மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அங்கீகாரம் பெற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment