12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திடீர் வெளியீடு...! கொரோனா சூழலால், மாணவர்களுக்கு காத்திருக்கும் அதிகளவு சவால்கள்!!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திடீர் வெளியீடு...! கொரோனா சூழலால், மாணவர்களுக்கு காத்திருக்கும் அதிகளவு சவால்கள்!!!

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திடீர் வெளியீடு...! கொரோனா சூழலால், மாணவர்களுக்கு காத்திருக்கும் அதிகளவு சவால்கள்!!!
கொரோனா சூழலால் மாணவர்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டன. இதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 

இந்த சதவீத அளவானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகாமாக உள்ளது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் உள்ளன.

 அதிலும், 34 ஆயிரத்து 842 மாணவர்கள் 12ம் வகுப்பு இறுதி தேர்வை எழுதவில்லை. இதனால், அவர்களுக்கு இந்த மாதம் 27ம் தேதி மறுதேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதில் 818 பேர் மட்டுமே தேர்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் சிறப்பு துணை தேர்வுகளுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்த சூழலில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான இணைய விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் ஒற்றைச்சாளரை முறைக்கான முன்னோட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

எனவே தேர்வு எழுதாத அல்லது தேர்ச்சிபெறாத மாணவர்கள் இந்தாண்டே தங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளில் நிலைமை இன்னும் தெளிவாகவில்லை. 

இதனால், மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான  நீட் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐஐடி போன்ற பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு எழுதும் மையங்களை மாணவர்கள் மாற்றிக்கொள்ளும் வசதி அளிக்கப்பட்டு, பல மையங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ஊரடங்கு மற்றும் பொதுப்போக்குவரத்து முடக்கத்தால், தேர்வு மையங்களுக்கு செல்வதற்கான சிக்கல் நிலவுகிறது. 

நுழைவு தேர்வுக்கு பயிற்சி எடுக்கும் மாணவர்கள், பயிற்சி மையங்களுக்கு செல்லமுடியாத சூழலில் இணைய வகுப்புகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில் அடுத்து என்ன? என்பது குறித்து பல கேள்விகள் இருந்தாலும், மாணவர்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் செயல்படவேண்டியது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது

No comments:

Post a Comment