குறைந்தப்பட்ச மதிப்பெண்ணில் தளர்வு :என்ஐடி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் 2ல் 75% மதிப்பெண் தேவையில்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 23, 2020

குறைந்தப்பட்ச மதிப்பெண்ணில் தளர்வு :என்ஐடி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் 2ல் 75% மதிப்பெண் தேவையில்லை

குறைந்தப்பட்ச மதிப்பெண்ணில் தளர்வு :என்ஐடி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் 2ல் 75% மதிப்பெண் தேவையில்லை

என்ஐடி, ஐடி போன்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு இந்தாண்டு நீக்கியுள்ளது.


கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால், பல்கலை மானியக் குழு செப்டம்பரில் கல்லூரி பருவத் தேர்வுகளை நடத்தும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியது.

 ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள், தேர்வு குறித்த முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டு விடும்படி வலியுறுத்தி வந்தன. இதனிடையே, தமிழக முதல்வர் பழனிசாமி, இறுதியாண்டு தவிர்த்து, கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.


இந்நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் (என்ஐடி) சேருவதற்கு 12ம் வகுப்பில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க தேவையில்லை என்று மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவரது நேற்றைய டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `நாட்டில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, மத்திய இட ஒதுக்கீடு வாரியம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சேர்க்கையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

 ஜேஇஇ-2020 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. அவர் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் முக்கியமல்ல,’ என்று கூறியுள்ளார்.

* என்ஐடி., மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.

* ஏற்கனவே, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment