2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு பிறப்பித்த நிறுவனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு பிறப்பித்த நிறுவனம்

2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவு பிறப்பித்த நிறுவனம்
உலக அளவில் கொரோனா தாக்கம் காரணமாக அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான 'கூகுள்' தனது ஊழியர்களை 2021 ஜூன் வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து , வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

இதையடுத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்ற கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021 ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் ஆல்பபெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இ.மெயில் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment