அண்ணா பல்கலைக்கழகம் 5ம் தேதி வரை மூடப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 1, 2020

அண்ணா பல்கலைக்கழகம் 5ம் தேதி வரை மூடப்படும்

அண்ணா பல்கலைக்கழகம் 5ம் தேதி வரை மூடப்படும்
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 5ம் தேதி வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழக அரசு கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஊரடங்கு அறிவித்து இருந்தது. அதேபோல், 7 நாட்களுக்கு மதுரை மாவட்டத்திலும் கடுமையான ஊரடங்கு அறிவித்தது. 

இதையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாகங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்துக்கு தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகங்களும் ஜூலை 5ம் தேதி வரை மீண்டும் மூடப்படுகின்றன

. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரிகளின் டீன்கள், முதல்வர்கள், இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள் அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 முகக்கவசம், கையுறை அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட சுகாதார பணிகள், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment