500/500 மதிப்பெண் பெற்று 10ஆம் வகுப்பு மாணவி சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 12, 2020

500/500 மதிப்பெண் பெற்று 10ஆம் வகுப்பு மாணவி சாதனை

500/500 மதிப்பெண் பெற்று 10ஆம் வகுப்பு மாணவி  சாதனை
ஹரியாணா மாநிலம் ஹிசாரில் வசிக்கும் மாணவி ரிஷிதா ஹரியானா போர்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்று 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்

ஹரியாணா மாநிலம் Hisarஇன் நர்னாண்டைச் சேர்ந்த ரிஷிதா, ஹரியானா கல்வி வாரியத்தின் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தார். அதுமட்டுமல்ல, 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளார்.

ரிஷிதா 500/500 என்ற மதிப்பெண்களை பெற்றிருப்பது இன்று வைரலாகும் செய்தியாகிவிட்டது.

ரிஷிதாவின் பள்ளியைச் சேர்ந்த உமா, கல்பனா மற்றும் சுஷில் 499 மதிப்பெண்களை பெற்று ஹரியானா பள்ளி கல்வி வாரிய (பி.எஸ்.இ.எச்) தேர்வுகளில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற இரண்டு மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஹரியாணா மாநில பள்ளி கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

மொத்த மதிப்பெண்களையும் அள்ளி குவித்து தனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ரிஷிதா ஒரு டாக்டராக விரும்புகிறார்.

"என் பெற்றோரும் ஆசிரியர்களும் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார்கள். கடின உழைப்புதான் வெற்றிக்கு முக்கியம் என்று நான் நம்புகிறேன்," என்று ரிஷிதா தனது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்துக் கொண்டார்.

தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தான் படித்ததாக இந்த மாணவி கூறுகிறார் "நான் தினசரி 7 முதல் 8 மணி நேரம் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து வந்த பிறகு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டேன். 

அதோடு, அம்மாவுக்கு வீட்டு வேலைகளிலும் உதவி செய்வேன். பிறகு மீண்டும் இரவு 10 மணி வரை படிப்பேன்" என்று ரிஷிதா சொல்வதைக் கேட்டால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

தான் சமூக ஊடகங்களை பயன்படுத்தவில்லை என்று கூறும் ரிஷிதா, அதனால் தனக்கு எந்தவிதமான கவனச்சிதறலும் இல்லை என்று கூறுகிறார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் கடின உழைப்பின் விளைவாக மாணவர்களின் இந்த சாதனையை ஏற்படுத்தியிருப்பதாக என்று பள்ளியின் முதல்வர் தரம்பல் யாதவ் குறிப்பிட்டார்.

நாங்கள் எங்களுடையப் பள்ளியில் உதவி புத்தகங்களை (help books, guides) ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. NCERT பரிந்துரைத்த புத்தகங்களில் இருந்தே மாணவர்களுக்கு நாங்கள் கற்பிக்கிறோம்" என்று பள்ளி முதல்வர் தெரிவிக்கிறார்.

ஹரியாணா பள்ளி கல்வி வாரியம் BSHE, வெள்ளிக்கிழமையன்று 10 ஆம் வகுப்பு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது.

1 comment: