6,520 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 28, 2020

6,520 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு

6,520 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு
6,520 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு, உடற்கல்வி மீது ஆர்வம் ஏற்படுத்துதல், உடற்கல்வியின் அவசியத்தை உணர்த்துதல் போன்றவை தொடர்பாக தனியாருடன் இணைந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிவழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

 இதற்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரத்து 520 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை 13 கட்டங்களாக உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 6 நாள் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

இந்த ஆன்லைன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 520 உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment