ATM களுக்கு அடிக்கடி செல்ல வேண்டாம்:மருத்துவ நிபுணர்கள்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 21, 2020

ATM களுக்கு அடிக்கடி செல்ல வேண்டாம்:மருத்துவ நிபுணர்கள் 

ATM களுக்கு அடிக்கடி செல்ல வேண்டாம்:மருத்துவ நிபுணர்கள்
கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க அடிக்கடி செல்ல வேண்டாம். வாரம் அல்லது 15 நாளைக்கு ஒருமுறை பணத்தை எடுக்கும் வழக்கத்துக்கு வரவேண்டும். மற்ற தேவைகளுக்கு டெபிட், கிரிடிட் கார்டுகளை ஸ்விப் செய்து கொள்வது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 தொடர்ந்து அன்றாட செலவுக்கு 100, 500 என்று எடுப்பதன் மூலம் கொரோனாவை உங்களுக்கு வீட்டு வாசலுக்கு நீங்களே அழைப்பது போன்றது ஆகும். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏடிஎம் மையங்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு மிகவும் அதிகரித்து உள்ளதாகவும், எனவே ஏடிஎம் மையங்களை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் தொடும் பட்டன்கள் மூலம் கொரோனா வைரஸ்சை நீங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

 கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் 80 சதவீதம் பரவுகிறது. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் எந்த இடத்திலும் கை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் ஏடிஎம் மையங்களில் விரல்களை பயன்படுத்த வேண்டிய நிலை உண்டாகிறது. இதைப்போன்று தினசரி குறைந்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரு ஏடிஎம் மையத்தை பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

இந்த ஏடிஎம் மையத்தை பயன்படுத்தியவர்களின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அது நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவும். அதுமட்டுமில்லாமல் அது காற்றோட்டம் இல்லாத சிறிய அறை என்பதால் யாராவது தும்மல் அல்லது இருமிவிட்டு சென்று இருந்தாலும் வைரஸ் கிருமிகள் சில மணிநேரம் உயிர்போடு இருக்கும்.

 எனவே பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும். மாதம் ஒரு முறை மட்டும் ஏடிஎம் மையத்தை பயன்படுத்துவது நல்லது. அந்த நேரத்தில் தேவையான அனைத்து பணத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஏடிஎம் மையங்களுக்கு ெசல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* பேனா, சாவிகளை பயன்படுத்தலாம்

ஏடிஎம் மையங்களில் உள்ள பட்டன்களை பேனா மற்றும் இருசக்கர வாகனங்களின் சாவிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இதனால் கைகள் மூலம் கொரோனா பரவுதை தடுக்கலாம். இல்லாவிடில் கையுறை அணிந்து கொண்டும் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தலாம்
.

No comments:

Post a Comment