கல்வி களத்தில் மீண்டும் ஒரு மைல்கல்! கொங்கு மாவட்டங்கள் கிங் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

கல்வி களத்தில் மீண்டும் ஒரு மைல்கல்! கொங்கு மாவட்டங்கள் கிங்

கல்வி களத்தில் மீண்டும் ஒரு மைல்கல்! கொங்கு மாவட்டங்கள் கிங்
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய கொங்கு மாவட்டங்கள், மாநில அளவில் தொடர்ந்து மூன்றிடம் பிடித்து, அசத்தியுள்ளன.நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கொரோனா குறுக்கிட்டதால் வழக்கமான எதிர்பார்ப்பை காட்டிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புக்கு இடையே, முன்னறிவிப்பின்றி நேற்று, வெளியிடப்பட்டது.

பிளஸ் 1 'அரியர்' தேர்வு எழுதியவர்களுக்கும், முடிவு வெளியானது.

காலை, 9:00 மணி முதல், மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு, மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இணையதளம் வாயிலாகவும் மாணவர்கள் முடிவுகளை அறிந்துக் கொண்டனர்.

'நெட்வொர்க்' பிரச்னையால், பெரும்பாலான மாணவ, மாணவியர், அவரவர் பள்ளிகளுக்கே சென்று, நேரடியாக தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். இவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது.

111 பள்ளிகள் சென்டம்

மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 23 ஆயிரத்து 398 பேர் பங்கேற்றனர். இதில், ஆண்கள், 10 ஆயிரத்து 418; பெண்கள், 12 ஆயிரத்து 980 பேர் தேர்ச்சி பெற்றனர்.கடந்தாண்டு, தேர்ச்சி விகிதத்தை காட்டிலும், நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 

இதற்காக உழைத்த அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். தேர்வு எழுதிய, 211 பள்ளிகளில், 111 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியாகியுள்ளனர்.இதில், 9 அரசு பள்ளிகள், ஒரு நகராட்சி பள்ளி, நான்கு பகுதி உதவி பெறும் பள்ளிகள், 8 சுயநிதி பள்ளிகள் மற்றும், 89 மெட்ரிக் பள்ளிகள், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன,'' என்றார்

.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், திருப்பூர் கல்வி மாவட்ட அதிகாரி பழனிசாமி உட்பட அனைத்து கல்வி மாவட்ட அதிகாரிகள், வாழ்த்துக்களை பரிமாறி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


அரசு பள்ளிகளில், 2ம் இடம்

திருப்பூர் மாவட்டத்தில், 66 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இதன் தேர்ச்சி விகிதத்தை, ஒப்பிடுகையில் மாநில அளவில், திருப்பூர் மாவட்டம், 93.34 சதவீதத்துடன், 2ம் இடம் பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், 94.51 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், நாமக்கல், 92.32 சதவீதம் பெற்று, 3ம் இடத்திலும் உள்ளது.குறிப்பிடத்தக்கது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி, சதவீதம் கடந்தாண்டை விட, 3 சதவீதம் உயர்ந்துள்ளது. 

மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும், 98.95 சதவீதத்தில் இருந்து, 99.75 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment