சத்துணவு மானியத்திற்கு மாணவர் வங்கி கணக்கு: தலைமை ஆசிரியர்கள் குழப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 21, 2020

சத்துணவு மானியத்திற்கு மாணவர் வங்கி கணக்கு: தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

சத்துணவு மானியத்திற்கு மாணவர் வங்கி கணக்கு: தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

சிவகங்கை:அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு மாற்றாக உலர் உணவு வழங்கிவரும் நிலையில், வங்கி கணக்கு துவக்க வலியுறுத்துவதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறையால் மாணவர்களுக்கு சத்துணவுக்கு மாற்றாக உலர் உணவாக அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டது.

இம்மாவட்டத்தில் சத்துணவு சாப்பிடும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 75 ஆயிரத்து 141 மாணவர்களில், ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை நபருக்கு 3 கிலோ 100 கிராம் அரிசி, ஒரு கிலோ 200 கிராம் பருப்பு, 6 முதல் 8 ம் வகுப்பிற்கு நபருக்கு 4 கிலோ 650 கிராம் அரிசி, ஒரு கிலோ 250 கிராம் பருப்பு வழங்கி வருகின்றனர்.

வங்கி கணக்கால் குழப்பம்

முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, சத்துணவுக்கான நிதி வழங்க, மாணவர்களுக்கு ஸ்டேட் வங்கியில் கணக்கு துவக்கி, மாணவர் பெயர், சேமிப்பு கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோட் எண் விபரங்களை விரைந்து வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

 தற்போது வங்கிகளில் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், வங்கிக்கு சென்று கணக்கு துவக்க முடியாமல் மாணவர்களும், ஊரடங்கால் மாணவர்கள் வருகையின்றி அவர்களிடம் கணக்கு எண்களை பெறமுடியாமல் ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர்.

வங்கி கணக்கு கேட்கவில்லை

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் கூறியதாவது, மாணவர்களுக்கு உலர் உணவாக அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு துவக்ககோரி கல்வி துறை தான் தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்துகின்றனர்.

இனி வரும் காலங்களில் பணமாக தருகிறார்களா என்பது பற்றி தகவல் வரவில்லை, என்றார்.

No comments:

Post a Comment