அத்தியாவசிய பட்டியலில் இருந்து இந்த பொருட்கள் நீக்கம்
கொரோனா பாதிப்பையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த (என்95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்)முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் போன்றவற்றை, அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, .முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்து கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த வகைப் பொருட்களைப் பதுக்கினாலோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாகும் என அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு 100 நாட்களைக் கடந்து 7 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் தேவையான அளவு தற்போது இரு பொருட்களும் மக்களுக்கு கிடைப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment