ஏழை மாணவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 12, 2020

ஏழை மாணவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர்

ஏழை மாணவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர்
மத்திய அரசு கல்வித்துறையில் தவறான கொள்கைகளை பின்பற்றுவதாகவும், இது குழப்பத்திற்கே வழிவகுப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

 இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் குறித்து உ.பி.,முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை. பெரும்பாலான இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் இணையச்சேவை கிடைப்பதில் பிரச்னை உள்ளது. 

ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிபுரிகிறது. பழங்குடியின, பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு நடத்துகிறது.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மற்ற பணியாளர்களின் வாழ்வாரத்தை பா.ஜ., அரசு கருத்தில் கொள்ளவில்லை

. கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி கட்டணம் கேட்க கூடாது என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் கட்டணம் செலுத்த கூடிய நிலையில் இருப்பவர்களும் கட்டணத்தை செலுத்தவில்லை.

இதன் காரணமாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். சில தனியார் கல்வி நிறுவனங்கள், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளத்தை அளித்துள்ளனர். 

சில நிறுவனங்கள் மார்ச் மாத சம்பளத்தை கூட பணியாளர்களுக்கு தரவில்லை. இது தீவிரமான பிரச்னை. தங்கள் வாழ்வாதாரத்திற்காக கல்வித்துறையை சார்ந்திருப்போருக்கு மன சோர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment