ஊழியர் வருகை பதிவேடு:தினமும் அனுப்ப உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 12, 2020

ஊழியர் வருகை பதிவேடு:தினமும் அனுப்ப உத்தரவு

ஊழியர் வருகை பதிவேடு:தினமும் அனுப்ப உத்தரவு
அரசு ஊழியர்கள் வருகைப் பதிவேடு விபரங்களை, தினமும் காலை, 10:30 மணிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பேர், சுழற்சி முறையில் வாரத்தில், ஆறு நாட்கள் பணியாற்றி வருகின்றனர்.


தினமும் பணிக்கு வருவோர் குறித்த விபரங்களை காலை, 10:30 மணிக்குள், அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.தினமும், 50 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிக்கு வருவதால், அரசு பணிகள் தேக்கமடைகின்றன.

 எனவே, ஊழியர்கள் விரைவாக, நிலுவையில் உள்ள கோப்புகளை சரிபார்த்து அனுப்ப வேண்டும். ஊழியர்கள் வருகையில், ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும்.


துறையின் பெயர், மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை, பணி விலக்கு பெற்றவர்கள் எண்ணிக்கை, முதல் குழுவில் இடம் பெற்றுள்ள ஊழியர்கள், அவர்களில் பணிக்கு வந்தவர்கள், இரண்டாவது பணிக் குழுவில் உள்ள ஊழியர்கள், அவர்களில் பணிக்கு வந்தவர்கள் போன்ற விபரங்களை தினமும் காலை, 10:30 மணிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும் என, அந்தந்த துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment