சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் வருவாய் துறை நடத்த கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 20, 2020

சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் வருவாய் துறை நடத்த கோரிக்கை

சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் வருவாய் துறை நடத்த கோரிக்கை
கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள், வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

'இ - பாஸ்' இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுகள் துவங்கியுள்ளன. மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றுடன், வருவாய் துறையிடம் இருந்து பெறப்படும், வருமான சான்று, ஜாதி சான்று, முதல் தலைமுறை பட்டாதாரி சான்று போன்றவற்றையும், சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு, 'இ - சேவை' மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பல கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், மாணவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து வெகுதுாரத்தில், இ - சேவை மையங்கள் உள்ளன. 

அவற்றிலும், பல சேவை மையங்கள் முறையாக செயல்பட வில்லை.ஊழியர்கள் பற்றாக்குறை, இணையதள சர்வர் கோளாறு என, பல பிரச்னைகள் உள்ளதால், வருவாய் துறை சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

 இந்த பிரச்னையை போக்க, கல்லூரிகளிலேயே, வருவாய் துறை சார்பில் முகாம் அமைத்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும், வருவாய் துறையின் சார்பில், அங்குள்ள பேராசிரியர்கள், பணியாளர்கள், இதற்கான ஆன்லைன் பதிவை மேற்கொண்டு, மாணவர்களுக்கான சான்றி தழ்களை ஆன்லைனில் பெற்று வழங்கலாம்.

இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளு மாறு, வருவாய் மற்றும் உயர் கல்வித்துறைக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment