'மாஸ்க்' இல்லையா; ?ஆறு மாதம் சிறை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 20, 2020

'மாஸ்க்' இல்லையா; ?ஆறு மாதம் சிறை

'மாஸ்க்' இல்லையா; ?ஆறு மாதம் சிறை
நீலகிரி மாவட்டத்தில், முக கவசம் இல்லாமல், வெளியில் சுற்றுபவர்களுக்கு, ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை: மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளை விதிமீறி நடத்தியதால் இரு வாரங்களில் 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலும் தனிமைப்படுத்தியவர்கள் வெளியில் சுற்றினாலும் ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். எச்சில் துப்பினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியில்லாமல் திருமணம் உட்பட தனி நபர் நிகழ்ச்சிகளை நடத்தினால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment