பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 29, 2020

பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி

பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி
புதிய கல்வி கொள்கை பல கோடி பேரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், பாடத்திட்டங்களின் சுமைகளை குறைக்கும் நோக்கில், பல்வேறு கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: 'புதிய தேசிய கல்வி கொள்கை 2020' நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது கல்வித்துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம். இதனால் பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment