ஜப்பான், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற தமிழகத்தின் இந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, July 30, 2020

ஜப்பான், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற தமிழகத்தின் இந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு

ஜப்பான், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற தமிழகத்தின் இந்த  பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு
காரைக்குடி ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜப்பான், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு பெற்றுள்ளனர். 

காரைக்குடி ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. 100 மாணவர்கள் கலந்து கொண்டதில் 75 பேர் சென்னை, திருவள்ளூரில் உள்ள ஜப்பான் நிறுவனம், செங்கல்பட்டில் உள்ள அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 35 பேர் மாணவிகள். தேர்வு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணையை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்லூரி ஆலோசகருமான பேராசிரியர் சுப்பையா வழங்கினார்.

 முதல்வர் (பொ) பொன்வாசன், துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ், வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்

No comments:

Post a Comment