சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 1, 2020

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு 

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு


யு..பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதன்மை தேர்வு, மே, 31ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால், கொரோனா ஊரடங்கால், தேர்வு, அக்டோபர், 4ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், யு.பி.எஸ்.சி., தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த ஆண்டும், சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எழுதவுள்ளனர்.

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தேர்வு மையத்தை மாற்ற வாய்ப்பு வழங்குமாறு, மாணவர்கள் பலரும் கோரினர். அதை ஏற்று, தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், பிரதான தேர்விலும், தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம். யு.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஜூலை, 7லிருந்து, 13 தேதிக்குள் அல்லது ஜூலை, 20லிருந்து, 24ம் தேதிக்குள், மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றி தேர்வு செய்து கொள்ளலாம்.


முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மையத்தில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டால், இதர தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment