மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 7, 2020

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
மாமல்லபுரத்தில் காவல்துறை சார்பில் செயல்படும் போலீஸ் பாய்ஸ் கிளப்பில் பள்ளி சிறுவர்கள், மாணவர்கள் பலர் உள்ளனர். தற்போது, கொரோனா பரவலையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால், சிறுவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாவட்ட காவல்துறை சார்பில் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். 

எஸ்ஐ குப்புசாமி முன்னிலை வகித்தார். போலீஸ் பாய்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஏஎஸ்பி சுந்தரவதனம் கலந்து கொண்டு, சிறுவர்களுக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்

No comments:

Post a Comment