கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் எவை? இதோ விவரம்
9 மற்றும் 10-ஆம் வகுப்புப் பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பப்படுவதையொட்டி இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனையடுத்து கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மேலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தனியார் தொலைக்காட்சிகள் மூலமும் பாடங்களை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்புகளில் படங்களைப் பதிவேற்றச் செய்துத் தரும் நடவடிக்கை 15-ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையால் துவக்கப்பட உள்ளது.
மேலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தினசரி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.
இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் கண்டு மாணவர்கள் பயனடையலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - சேனல் 200
2. SCV - சேனல் 98
3. TCCL - சேனல் 200
4. VK DIGITAL - சேனல் 55
5. AKSHAYA CABLE - சேனல் 17
மேற்கண்ட அலைவரிசைகளில் கல்வித் தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment