வச்ச கண்ண எடுக்கமாட்டிங்க- வகுப்பறையில் பிளிறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 14, 2020

வச்ச கண்ண எடுக்கமாட்டிங்க- வகுப்பறையில் பிளிறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி!

வச்ச கண்ண எடுக்கமாட்டிங்க- வகுப்பறையில் பிளிறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி!

கேரள பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருவது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் தத்ரூப உருவங்கள்

கேரள மாநிலம் வலஞ்சேரி அருகே மூர்க்க நாட்டில் உள்ள AEM AUP பள்ளியில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆன்லைன் பாடம் எடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது.
குழந்தைகள் எளிதில் வகுப்பை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தத்ரூப உருவங்களை மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் காட்டப்படுகிறது.ஆர்வத்தை தூண்டம் குழந்தைகள்

ஆன்லைன் வகுப்பின் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தை பெருகிறார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை போக்கி மாணாக்களை கவரும் வகையில் AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ஷியாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தோன்ற வைத்துள்ளார்.

கிண்டர்கார்டன் ஆன்லைன் வகுப்பில் திடீரென புலிகள், யானைகள் ஆகியவை தோன்றுகின்றன. தீடீரென்று மரங்கள் முளைக்கின்றன. இதனால், குழந்தைகள் குதூகலிக்கின்றனர். கேரளா ஆசிரியரின் புதுமை முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவிவரும் காரணமாக ஆன்லைன் வகுப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.


சாதாரண முறையில் பள்ளியில் நடக்கும் வகுப்பில் குழந்தைகளை எளிதாக கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம். ஆனால் ஆன்லைன் அது சிரமமான காரியம் தான்.

குழந்தைகளுக்கு மிக எளிதில் கவனச்சிதறல் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க கேரளாவின் மல்லபுரத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆக்குமெண்டெட் ரியாலிட்டி என்று அழைக்கப்படும் மெய்நிகர் தோற்றத்தை ஏற்படுத்த அவர் தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளார்.

AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான ஷியாம் வெங்களூர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்பறையில் மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

கிண்டர்கார்டன் வகுப்பில், ஆசியருக்கு அருகில், மெய்நிகர் தோற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் குழந்தைகள் உற்சாகத்துடன் ஆன்லைன் வகுப்பில் கவனமாக பாடங்களை கவனிக்கிறார்கள்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷியாம் வெங்களூர், இந்த முயற்சியை செயல்படுத்த அவருக்கு இரண்டு மாதங்கள் ஆனது என்றும் குழந்தைகளுக்கு போரடிக்காமல், வகுப்பில் ஆர்வமுடன் கவனிக்க ஊக்குவிக்க வேண்டும் இருப்பதற்காக இந்த முயற்சியை தான் மேற்கொண்டதாகவும் கூறினார்.

இப்போது கேரளாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் ஷ்யாம் வெங்களூரின் உதவியை நாடுகின்றனர்

கிரீன் ஸ்கிரீன்,GIF எனப்படும் கிராஃபிக்ஸ் இன்டர்சேன்ஞ் ஃபார்மட் இமேஜ்கள், பல்வேறு செயலிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களின் உதவியுடன், வகுப்புகளில் மெய்நிகர் தோற்றங்களையும், அதற்கேற்ற ஆடியோ களையும் இணைத்து அவர் இதை சாதித்துள்ளார்.

வகுப்பிற்கு இடையில் தோன்றும் புலிகளையும் யானைகளையும் அதன் கர்ஜனை களையும் கேட்டு குழந்தைகள் குதூகலிக்கின்றனர்

முன்னதாக ஜூன் 1ம் தேதி பள்ளிக் குழந்தைகளுக்காக "ஃப்ர்ஸ்ட் பெல்" என்ற பெயருடன் ஆன்லைன் வகுப்புகளை கேரள மாநிலம் தொடங்கியது. ஆன்லைன் யூடியூப் சேனல் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று கேரளாவின் கல்விக்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment