கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 20, 2020

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் மற்றும்  அனைத்து பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை (செமஸ்டர்) ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.

 இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021 ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இது அவர்களின் சீனியாரிட்டியை பாதிக்கும். தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.


தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து ஹால்டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிங்ஸ்டன் ஜெரால்ட் ஆஜரானார்.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, மத்திய அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment