எங்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களை அனுப்புங்க முதல்வரே'..! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

எங்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களை அனுப்புங்க முதல்வரே'..!

எங்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களை அனுப்புங்க முதல்வரே'..!
கோவை: பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் பகுதி வாரியாக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திட நடவடிக்கை வேண்டி மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம்  முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்வி முறை கோவை மாவட்டத்தில் வாழுகிற எண்ணற்ற பழங்குடியின மாணவர்களுக்கு சென்றடைய கூடிய விதத்தில், அவர்கள் வாழுகிற பகுதிகளில் மின்சார வசதிகளோ, நவீன தொழில்நுட்ப வசதிகளோ,( தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு மொபைல்) இல்லாமல் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கான கல்வி கிடைக்காத நிலை உள்ளதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இணையதள வழி கல்வி முறையால் பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கான கல்வி பெறமுடியாமல் போகும் என்பதையும் தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம், ஆகவே, சமூகம் ஒவ்வொரு வனச்சரகம் வாரியாக உள்ள குடியிருப்புகளில், தற்போது மேல்நிலைக்கல்வி பயில்கின்ற மாணவர்களை கொண்டு, அவர்கள் வாழுகிற அருகாமை அரசுப் பள்ளிகளிலேயே, ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட, தாங்கள் உதவிட வேண்டுகிறோம்'.

இம்மாணவர்களுக்கு காலை, மதியம் என சத்துணவு வழங்கிடவும், சிறப்பு வகுப்புக்கு அழைத்து வர வாகன வசதிகளும் செய்து தர தாங்கள் உத்தரவிட பணிவுடன் வேண்டுகிறோம். மற்றும் சமவெளிப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் மேல்நிலை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கும் பேரூராட்சி, ஊராட்சி வாரியாக அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்புக்களை நடத்திட தாங்கள் உத்தரவிட அன்புடன் வேண்டுகிறோம்''.

பழங்குடியின குடியிருப்புகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியிலேயே ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்திட உதவுவதோடு, அவர்களுக்கான சத்துணவையும் வழங்கிட தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு பழங்குடியின மாணவர்களின் நலன் காத்திட அன்புடன் வேண்டுகிறோம்'' என முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment