MCA படிப்பு காலம் குறைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 6, 2020

MCA படிப்பு காலம் குறைப்பு

MCA படிப்பு காலம் குறைப்பு
 மூன்று ஆண்டுகளாக இருந்த எம்.சி.ஏ., படிப்புக்கான காலத்தை 2 ஆண்டுகளாக குறைத்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

ஏஐசிடிஇ விதிகளின்படி எம்சிஏ படிப்பு இதுவரை மூன்று ஆண்டுகளாக இருந்த நிலையில், இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.

கடந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதி குழுவின் 545- ஆவது கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், எம்சிஏ படிப்பின் கால அளவை 2 ஆண்டுகளாக மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 2020-2021-ஆம் ஆண்டு முதல், எம்சிஏ படிப்பு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 2020-2021-ஆம் ஆண்டு முதல் எம்சிஏ படிப்பில் சேர பிசிஏ., அல்லது பிஎஸ்சி., கம்ப்யூட்டா் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது பி.காம்., பிஎஸ்சி., பிஏ., படித்தவா்கள், பிளஸ் 2 வகுப்பில் கணிதத்தைப் பாடமாக படித்திருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

எம்சிஏ., படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றப்படுவது 2020-21-ஆம் ஆண்டில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்சிஏ., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment