உயர் கல்வி நிறுவனங்களுக்கு UGC பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பருவமழைக்கு முன்பாக மாணவா்களின் பங்களிப்புடன் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நமது நாட்டின் தேசிய தண்ணீா் தூதுக்குழு ‘மழைநீரை சேகரிப்போம்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதன்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை மாணவா்களின் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும்.
இதுதவிர, கல்வி மைய வளாகம் தவிர அருகே உள்ள இடங்களிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ளவற்றை பழுதுநீக்குதல், அணைகள், ஏரி, குளங்களை தூா்வாருதல், கிணற்றை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மாணவா்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும். பருவமழை காலம் தொடங்கும் முன்னரே இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment