100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு... தொற்றை கையாண்டது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு... தொற்றை கையாண்டது எப்படி?

 100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு... தொற்றை கையாண்டது எப்படி?

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் தொற்றின் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. ஒரு புறம் நோயாளிகள் குணம் அடைந்தாலும் மறுபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


கடந்த 100 நாட்களாக தங்களது நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று நியூசிலாந்து நாட்டு அரசு அறிவித்துள்ளது. நியூசிலாந்தில் தற்போது 23 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதே பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நியூசிலாந்து நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது முதல் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 

ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வெறும் 4 பேர் மட்டுமே கொரோனாவா உயிரிழந்துள்ளனர். இது உலகளாவில் மிகக்குறைவாகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 488 பேரும், அதிகபட்சமாக பெல்ஜியமில் 850 பேரும் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மூன்று முக்கியமான விஷயங்களை பின்பற்றியதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, எல்லையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம், தனிமனித இடைவெளி மூலம் சமூக பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 மேலும், பரிசோதனைகள், தொடர்புகளை தடமறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் மூலமாகவும் அந்நாட்டு அரசு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பொது மக்களின் ஒத்துழைப்பும், அரசின் துரிதமான நடவடிக்கைகளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவிகரமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment