அக்டோபர் 15-ம் தேதிக்குள் 22 ஆயிரம் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி: இந்த மாநில அரசு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 19, 2020

அக்டோபர் 15-ம் தேதிக்குள் 22 ஆயிரம் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி: இந்த மாநில அரசு அறிவிப்பு

 அக்டோபர் 15-ம் தேதிக்குள் 22 ஆயிரம் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி: இந்த மாநில அரசு அறிவிப்பு

22 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகளை வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ''12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் கிரேடு மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கப்படும்


பிரக்யான் பாரதி திட்டத்தின் கீழ், சுமார் 22 ஆயிரம் மாணவிகளுக்கு ஸ்கூட்டிகளை வழங்க உள்ளோம். ஒவ்வொரு ஸ்கூட்டிக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டி தேவைப்படும் மாணவிகள் இதற்காகத் தனியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.


அக்டோபர் 15-ம் தேதிக்குள் அனைத்து வண்டிகளும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு விடும். 3 ஆண்டுகளுக்குப் பயனாளிகளால், ஸ்கூட்டியை விற்க முடியாது.


அதேபோல மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.


கரோனா காலத்தில் சிபிஎஸ்இ மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment