தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 7, 2020

தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்:

 தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கையில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி வருகிறது. அதேபோல் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை ஏப்ரல் 2-இல் தொடங்கி மே 29-இல் முடிவடைந்து விடும்.

ஆனால் நடப்பாண்டில் தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.

பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் இணையவழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மாணவா்கள் சோ்க்கை காலதாமதமாவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பள்ளிகளில் சோ்ப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்

No comments:

Post a Comment