பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி 400 கல்லூரிகள் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, August 6, 2020

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி 400 கல்லூரிகள் விண்ணப்பம்

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தக் கோரி 400 கல்லூரிகள் விண்ணப்பம்
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 400 தனியார் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணங்களை உயர்த்தக் கோரி கட்டண நிர்ணயக்குழுவிடம் விண்ணப்பித்துள்ளன.

கல்லூரி நிர்வாகங்களுடனான ஆலோசனைக்கு பிறகு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண விகிதங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு கல்லூரிகள் சமர்பிக்கும், வரவு செலவு கணக்குகளுக்கு ஏற்ப கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கிறது

அந்தவகையில் கடந்த ஆண்டுடன் பழைய கட்டண விகிதங்கள் முடிவுற்றது. இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டு முதல், அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கான புதிய கல்வி கட்டணம் விரைவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. கட்டண உயர்வு குறித்து கல்லூரி நிர்வாகங்கள் விண்ணப்பிக்கலாம் என கட்டண நிர்ணயக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது வரை 400 கல்லூரிகள் விண்ணப்பித்து உள்ளதாக கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 17-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு துவங்க உள்ளதால், அதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment