வங்கியில் 6 மாதமாக ஓய்வூதிய பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தம்; தமிழக அரசு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 17, 2020

வங்கியில் 6 மாதமாக ஓய்வூதிய பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தம்; தமிழக அரசு உத்தரவு

 வங்கியில் 6 மாதமாக ஓய்வூதிய பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தம்; தமிழக அரசு உத்தரவு

அனைத்து மண்டல கருவூல இணை இயக்குனர்களுக்கு கருவூலத்துறையின் ஆணையர் சமயமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியங்களை வங்கிகளில் இருந்து எடுக்காதவர்களின் விவரங்களை கருவூலத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு ஓய்வூதியங்களை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்கு பிறகும் அவர்களின் வங்கி கணக்குகளில் ஓய்வூதியங்கள் வரவு வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், வாழ்வு சான்றிதழில் ஏற்படும் தவறுகளை தடுத்தல் மற்றும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தல் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment