74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 12, 2020

74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.!

 74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.!

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின்  ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். 

இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்  கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.


 சுதந்திர போரோட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிரிக்கும் விதமாகவும், நாள்த்தோறும் பத்து சுதந்திர போராட்ட் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போனாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பாக மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத்  திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment