உதவி தொகைகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை பெற இ-சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ந.காளிதாஸ் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்டங்களின்கீழ்வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக அனுப்பி பொதுமக்கள் பயன்பெறலாம்.
இதேபோல், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் இணையதளம் வழியாக அனுப்பி பயன்பெற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment