அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை பாடம்

 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை பாடம்


தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுக்கவும், சத்துணவு திட்டத்தில், தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்துக்கொள்ள, பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளது

.ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ஒன்றியத்தில், 33 பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதன் மூலம், பள்ளிகள் திறந்ததும், மாணவர்கள் விவசாயம் குறித்து கற்றுக்கொள்வதுடன், தற்சார்பு வாழ்க்கையை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆனைமலை ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது

தோட்டக்கலைத்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய மூன்று துறைகள் இணைந்து, காய்கறித்தோட்டம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா, ஐந்தாயிரம் ரூபாய் செலவில் காய்கறித்தோட்டம் அமைக்கப்படுகிறது. 

துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 33 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தற்போது, கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்களால் காய்கறித்தோட்டம் அமைக்கப்படும். 

இதற்காக, இவர்களுக்கு தோட்டக்கலைத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர்.பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும். காய்கறித்தோட்டம் அமைக்க இடமில்லாத பள்ளிகளில், மாடித்தோட்டம் அமைக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

No comments:

Post a Comment