சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 22, 2020

சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

 சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்


சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகையை பெறும் வகையில் அதற்கான விவரங்களை அரசு உதவிபெறும் பள்ளிகள் வரும் செப்டம்பா்15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை


தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட்டது

. இதனால் ஏற்படும் நிதியிழப்பை ஈடுசெய்ய சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகை 2008-2009-ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளுக்கு தேவைப்படும் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான விவரங்களை வரும் செப்.15-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment