புதிய கல்விக்கொள்கை: அரசு அமைக்கும் வல்லுநர் குழுவில் ஆசிரியர் சங்கங்கள் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 9, 2020

புதிய கல்விக்கொள்கை: அரசு அமைக்கும் வல்லுநர் குழுவில் ஆசிரியர் சங்கங்கள் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்

 புதிய கல்விக்கொள்கை: அரசு அமைக்கும் வல்லுநர் குழுவில் ஆசிரியர் சங்கங்கள் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழுவில் அங்கீகரிக்கப் பட்ட ஆசிரியர் சங்கங்கள் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்" என தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்திட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடங்களை ஒதுக்கிட முடிவெடுத்துள்ள அரசின் முடிவை சங்கம் பாராட்டுகிறது. அனைவருக்கும் தரமான சமமான கல்வி இலவச கல்வி கிடைக்க மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.

மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பல சீர்திருத்தங்களை வெளியிட்டுள்ளது. நிர்வாகம் நிதி ஆகிவற்றில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது இரு மொழி கொள்கையே தொடரும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சாதக பாதககங்கள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அரசு அமைக்கும் குழுவில் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்றார்.

1 comment:

  1. வல்லுநர்கள் என்பவர் யார்? இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 35 மார்க் எடுத்து, ஆசிரியப்பணி, சேவை அல்ல, செயபவர்பள்தானா?. என்னைப்போன்று, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் அனுபவம் உபயோகமற்றதா? கருத்துக்களை அறிய ஆவல். அழைக்கவும். 7010960982.

    ReplyDelete