உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தப்படும்: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தப்படும்: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தப்படும்: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கல்லூரிமாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.


தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வை தவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


அதேநேரம் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதால் இறுதி பருவத்தேர்வு குறித்து முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.


இந்நிலையில் இறுதி பருவத்தேர்வை அவசியம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இறுதிப்பருவத் தேர்வுகளை நடத்துவதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வுகள் நடத்தப்படும். தேர்வை நடத்துவது குறித்து தற்போது ஆலோசனை செய்துவருகிறோம்


அதன்முடிவில் பருவத்தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அந்தக் குழுவைக் குறித்த முழுமையான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும்

No comments:

Post a Comment