மாணவர்களுக்கு பாடத்திட்டம், வீட்டுப்பாடங்களை குறைக்கலாம்: ஐகோர்ட் பரிந்துரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 20, 2020

மாணவர்களுக்கு பாடத்திட்டம், வீட்டுப்பாடங்களை குறைக்கலாம்: ஐகோர்ட் பரிந்துரை

 மாணவர்களுக்கு பாடத்திட்டம், வீட்டுப்பாடங்களை குறைக்கலாம்: ஐகோர்ட் பரிந்துரை

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


அதேபோல், கண் பாதிப்பு ஏற்படுவதாக வக்கீல் விமல் மோகன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

இதில் தமிழக அரசு மற்றும் மருத்துவ அதிகாரிகள் அறிக்கை மற்றும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஜெ.ரவீந்திரன், பிரபாகரன், கவுதமன் ஆகியோர் ஆஜராகி, ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன

. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை. ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை


தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க காட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆன்லைன் வகுப்புகளை துவங்கும் முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டது. 

இந்த கல்வி முறையால் கிராமபுற மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது. கிராம புறங்களிலும் நூற்றுக்கு 44 சதவீதம் பேரிடமும் நகரங்களில் 65 சதவீதம் பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால் இணையதள கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை.


நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும்  கம்ப்யூட்டர் மூலமே மாணவர்கள் செய்கின்றனர். அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த வேண்டும் என்று வாதிட்டனர்

. இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை. எனவே, பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை குறைக்க வேண்டும். வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும். மேலும்,  மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தனர்

No comments:

Post a Comment