நீருக்கடியில் கியூபிக்: சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 28, 2020

நீருக்கடியில் கியூபிக்: சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை

 நீருக்கடியில் கியூபிக்: சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை


 நீருக்கடியில் 2.17 நிமிடங்களில் ஆறு க்யூப்ஸை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சென்னை இளைஞர் ஒருவர்.அமெரிக்கரின் முந்தைய ஐந்து க்யூப்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.


சென்னையை சேர்ந்தவர் இளையராம் சேகர், இவர் ரூபி கியூபிக் எனப்படும் கணித விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது இவர் நீருக்கடியில் 2.17 நிமிடங்களில் ரூபி கியூபிக்கை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கல்லூரியில் கடந்த 2013 ம் ஆண்டில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் போது கியூபிக்கின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 

இதற்காக இணைய தளம் மூலம் கற்று கொண்டதாக கூறினார். மேலும் கியூபிக்ஸில் பல்வேறு உலக சாதனை படைத்துள்ள அவர் தற்போது நீருக்கடியில் 2.17 நிமிடங்களில் ஆறு க்யூபிக்ஸில் புதிய சாதனையை படைத்துள்ளார்.


இயல்பான சூழ்நிலையில் க்யூபிக்ஸை தீர்ப்பது என்பது எளிமையாக இருந்த போதிலும் நீருக்கடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு க்யூபிக்ஸை சரி செய்வது என்பது அசாத்தியமானது. 

அதிக வேகத்தில் க்யூப்பை சரி செய்யும் போது சரியான அளவில் சுவாசம் பெறுவதற்காக ஒரு வருடம் வரையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரணாயாமா இதற்கு கைகொடுத்தது. எனகூறினார்.

No comments:

Post a Comment